மாந்தை மேற்கில் தெரிவு செய்யப்பட்ட கிராம மட்ட அமைப்புகளுக்கு கதிரைகள் வழங்கி வைத்த ரிஷாட்
மாந்தை மேற்கில் தெரிவு செய்யப்பட்ட கிராம மட்ட அமைப்புகளுக்கு கதிரைகள் வழங்கி வைத்த ரிஷாட் எம்.பி
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட கிராம மட்ட அமைப்புகளுக்கு முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(19) மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மாத்தை மேற்கு பிரதேச செயலாளர் ,பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்,முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட கிராமமட்ட அமைப்புகளுக்கு ஒரு தொகுதி கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டது.

No comments:
Post a Comment