மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற உள்ள பொங்கல் விழா
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற உள்ள பொங்கல் விழா
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் தைத்திருநாள் பொங்கல் விழா நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(21) காலை 9.30 மணியளவில் மன்னார் வாழ்வோதய மண்டபத்தில் இடம்பெற உள்ளது.
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெறவுள்ள குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன்,மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நானாட்டான் பிரதேசச் செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு,ஓய்வு நிலை மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்டியன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
சிறப்பு பேச்சாளராக மன்னார் உதவி தேர்தல் ஆணையாளர் வேலாயுதம் சிவராசா கலந்து கொள்ள உள்ளார்.
இதன் போது குறித்த நிகழ்வில் நடனம்,கிராமிய நடனம்,கவிதை,கிராமியப்பாடல்,மற்றும் சிறப்பு பட்டிமன்றம் ஆகியவை இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment