ஊஞ்சலில் விளையாடியக் கொண்டிருந்த சிறுவனுக்கு எமனாகிய ஊஞ்சல் கயிறு!
ஊஞ்சலில் விளையாடியக் கொண்டிருந்த சிறுவனுக்கு எமனாகிய ஊஞ்சல் கயிறு!
சிறுவன் பலி செம்மலையில் சோகசம்பவம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை பகுதியில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்றையதினம்(20) மாலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு செம்மலை பகுதியில் நேற்று (20.01.2024) மாலை 4.30 மணியளவில் வீட்டில் ஊஞ்சல் ஆடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் கழுத்தில் ஊஞ்சல் கயிறு சுற்றி இறுகியுள்ளது. இதனையடுத்து உறவினர்கள் குறித்த சிறுவனை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன இதனை தொடர்ந்து உடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது
குறித்த சம்பவத்தில் 10 வயதுடைய செம்மலை கிழக்கினைச் சேர்ந்த பிரசாத் டனிஸ் என்ற 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் செம்மலை மகாவித்தியாலயத்தில் அதிக மதிப்பெண் (140) எடுத்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (21) சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் (21.01.2024 மாலை 5.00) அவரது இல்லத்துக்கு எடுத்துவரப்பட்டுள்ளது
இந்த சிறுவனின் இழப்பு செம்மலை கிராம மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:
Post a Comment