மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா.
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் தைத்திருநாள் பொங்கல் விழா நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(21) காலை மன்னார் வாழ்வோதய மண்டபத்தில் இடம்பெற்றது.
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன்,மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நானாட்டான் பிரதேசச் செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு,ஓய்வு நிலை மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு பேச்சாளராக மன்னார் உதவி தேர்தல் ஆணையாளர் வேலாயுதம் சிவராசா கலந்து கொண்டார்.
இதன் போது குறித்த நிகழ்வில் நடனம்,கிராமிய நடனம்,கவிதை,கிராமியப்பாடல்,மற்றும் சிறப்பு பட்டிமன்றம் ஆகியவை இடம் பெற்றது.
மேலும் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு மன்னார் தமிழ்ச் சங்கத்தால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by வன்னி
on
January 21, 2024
Rating:






.jpeg)
.jpeg)





No comments:
Post a Comment