பாதிப்படைந்த விவசாயிகளுக்கு விரைவாக நஸ்ட ஈடு வழங்கப்படும்: கிராமிய, பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்
பாதிப்படைந்த விவசாயிகளுக்கு விரைவாக நஸ்ட ஈடு வழங்கப்படும்: கிராமிய, பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்
மழை, வெயில் காரணமாக பாதிப்படைந்த விவசாயிகளுக்கு விரைவாக நஸ்ட ஈடு வழங்கப்படும் என கிராமிய, பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (20.01) விவசாயிகளுக்கான லான்ட் மாஸ்ரர் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்திற்கு 6 லானடஸ் மாஸ்ரர்களும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் 6 லான்ட் மாஸ்ரர்களும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 50 வீதம் எமது அமைச்சின் ஊடாக மானியமாகவும், மிகுதி 50 வீதம் பயனாளிகளும் வழங்குகிறார்கள். 10 இலட்சம் பெறுமதியான ஒவ்வொரு லான்ட் மாஸ்ரருக்கும் 5 இலட்சத்தை எமது அமைச்சு வழங்கியுள்ளது. மழை, வெயில் காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கு தீர்வை பெற்றுக் கொள்ளும் முககமாகவும் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். மாற்று பயிற்செய்கை, மரக்கறி செய்கை ஊக்கிவிப்பு வேலைத் திட்டங்களை முன்னேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எமது மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய எமது அமைச்சரும், நாங்களும் பல வேலைகளை முன்னெடுத்துள்ளோம். அதில் ஒரு கட்டமாக லான்ட் மாஸ்ரர் வழங்கப்பட்டுள்ளது.
மழை, வெயில் காரணமாக விவசாயிகள் பாதிப்படைந்துள்ளார்கள். அவர்கள் மீண்டும் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நஸ்ட ஈடு வழங்க துரித நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது விபரங்கள் திரட்டப்பட்டுள்ளது. விரைவாக நஸ்ட ஈடு வழங்கப்படும். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது. விவசாயிகளுக்கான ஊக்குவிப்புக்கள் உள்ளது. அதனை நாம் ஆதரிக்க வேண்டும். அதை கொண்டு வந்த ஜனாதிபதிக்கு எமது ஆதரவு உண்டு.
எதிர்வரும் செப்ரெம்பர் அல்லது ஒக்ரோபர் காலப்பகுதியில் தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புகள்ள் உள்ளது. அந்த நிலமையின் போது கூட்டுக்கள் தொடர்பில் ஆராய்வோம். அப்போது தற்போதைய ஜனாதிபதியை ஆதரிப்பதற்கான கூட்டுக்களே வரும் என நம்புகின்றோம். நாட்டு மக்கள் இன்று எதிர்பார்ப்பது தமது பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதையே.
யாரும் முன்வராத நிலையில் ஜனாதிபதியாக வந்து மக்களது பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவரை தேர்தலில் ஆதரிக்கக் கூடிய நிலையே வரும். அதுவே நாட்டுக்கும் நல்லது. வீட்டுக்கும் நல்லது. மக்களும் அதனையே விரும்புகின்றனர் என்றார்.

No comments:
Post a Comment