கல்முனை மாநகர பாடசாலைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் திடீர் விஜயம்
கல்முனை மாநகர பாடசாலைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் திடீர் விஜயம் : மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் கையளித்தார் !
கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள கல்முனை கமு/கமு/ பஹ்ரியா மகா வித்தியாலயம், சாய்ந்தமருது கமு/கமு/ எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயம், நற்பிட்டிமுனை கமு/கமு/ லாபீர் வித்தியாலயம், மருதமுனை - பெரியநீலாவணை கமு/கமு/ அக்பர் வித்தியாலயம், கல்முனை கமு/கமு/ அஸ் ஸுஹரா வித்தியாலயம், கல்முனை கமு/கமு/ அஸ்ஹர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விஜயம் செய்து பாடசாலைகளின் குறைநிறைகளையும், கல்வி மேம்பாட்டு தேவைகளையும் பாடசாலை நிர்வாகத்திடம் கேட்டறிந்தார்.
இந்த விஜயத்தின் போது மாணவர்களிடம் கல்வி மேம்பாடு தொடர்பிலும், எதிர்கால கல்வி நிலைகள் தொடர்பிலும், பாடசாலை கால ஒழுக்க விடயங்கள் தொடர்பில் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தியதுடன் கல்முனை கமு/கமு/ பஹ்ரியா மகா வித்தியாலயம், சாய்ந்தமருது கமு/கமு/ எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயம், நற்பிட்டிமுனை கமு/கமு/ லாபீர் வித்தியாலயம், மருதமுனை - பெரியநீலாவணை கமு/கமு/ அக்பர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு கிழக்கு மாகாண சபை ஊடக கிடைக்கப்பெற்ற பாடசாலை புத்தக பைகளையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர் யூ.எல்.என். ஹுதா உமர், பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகத்தர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச முக்கியஸ்தர்கள், பாடசாலைகளின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Reviewed by வன்னி
on
February 04, 2024
Rating:








No comments:
Post a Comment