சாந்தன் இலங்கை வர அனுமதிக்க, ஸ்ரீதரன், மனோ ரணிலிடம் நேரடி கோரிக்கை.
சாந்தன் இலங்கை வர அனுமதிக்க, ஸ்ரீதரன், மனோ ரணிலிடம் நேரடி கோரிக்கை.
-சாதகமாக பரிசீலிப்பதாக ரணில் உறுதி
நேற்று சனிக்கிழமை நண்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்த இலங்கை தமிழரசு கட்சி தலைவர் சிவஞானம் சிறிதரன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர், ராஜிவ் கொலை வழக்கில் விடுதலைபெற்றுள்ள சாந்தனை இலங்கை வர மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்குமாறு கோரினர்.
இக்கோரிக்கையை சாதகமாக பரிசலித்து, சாந்தன் இலங்கை வந்து தன் வயதான தாயாரை சந்திக்கும் வாய்ப்பை தருவதாக ஜனாதிபதி இரண்டு கட்சி தலைவர்களிடமும் உறுதி யளித்துள்ளார்.
இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரட்னாயக்கவுக்கு, இரு தலைவர்களுக்கும் முன்னிலையில் ஜனாதிபதி பணிப்பரை விடுத்துள்ளார்.
சாந்தனின் தாயாரின் கோரிக்கை கடிதம் மற்றும் மேலதிக தகவல்களை தருமாறும் ஜனாதிபதி இலங்கை தமிழரசு கட்சி தலைவர் சிறிதரனின் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் பெஜட் வீதி அலுவலகத்தில் நேற்று நண்பகல் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
Reviewed by வன்னி
on
February 04, 2024
Rating:


No comments:
Post a Comment