அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் அதிகரித்திருக்கும் புற்றுநோய் உயிர் இழப்புகள் வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை

 யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் கடந்த வருடம் 2023ஆம் ஆண்டு 776 பேர் புற்றுநோயால் (cancer) பாதிக்கப்பட்ட நிலையில், 71 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாண மாவட்டத்தில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், சரியான உணவுப் பழக்கம் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு உதவும்.

சிகிச்சை முறைகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை பொறுத்தமட்டில் புற்றுநோய்களை இனம் காணுவதற்கான ஆய்வு கூட வசதிகள் காணப்படுகின்ற அதேவேளை மேலதிக ஆய்வுகளுக்காக மாதிரிகள் கொழும்புக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றது.


புற்றுநோயை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளை ஒழுங்காக மேற்கொள்ளும் போது நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

புற்றுநோய் வகைகள் 

பெண்கள் மாதவிடாய் ஒழுங்கீனம் தொடர்பில் அவதானமாக இருப்பதோடு கருப்பைக் கட்டி, சூலகப் புற்றுநோய் தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும்.


ஆண்களைப் பொறுத்தவரையில், புகையிலை, வெற்றிலை மற்றும் மதுபானம் போன்றவற்றால் வாய் மற்றும் ஈரல் புற்றுநோய் ஏற்படுகிறது” என தெரிவித்துள்ளார்.



வடக்கில் அதிகரித்திருக்கும் புற்றுநோய் உயிர் இழப்புகள் வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை Reviewed by Author on April 09, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.