ரமழானை முன்னிட்டு பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு
ரமழான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினரை பயன்படுத்த சிறப்பு பாதுகாப்பு திட்டம் ஒன்று நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குறித்த பாதுகாப்பு திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சகல பொலிஸ் பிரிவுகளிலும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் மௌலவிகளையும் சந்தித்து சிறப்பு பாதுகாப்பு திட்டம் குறித்து விளக்கமளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள 3,203 பள்ளிவாசல்களில் மத வழிபாடுகள் நடைபெறும் 2,453 பள்ளிவாசல்களுக்கு
சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
அந்த பள்ளிவாசல்களின் பாதுகாப்பிற்காக 5,580 பொலிஸ் அதிகாரிகள், 510 சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் 1,260 இராணுவத்தினர் உட்பட 7,350 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Reviewed by Author
on
April 09, 2024
Rating:


No comments:
Post a Comment