மன்னார் சாந்திபுரத்தில் சிறப்பாக இடம் பெற்ற மே தின நிகழ்வுகள்
மன்னார் சாந்திபுர கிராம மக்கள் ,இம்முறை சித்திரை புத்தாண்டு மற்றும் மே தின நிகழ்வுகளை இணைந்த ஒருங்கிணைந்த கிராமம் எனும் தொணிப்பொருளில் வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
குறித்த கிராம மக்கள் கடந்த காலங்களில்,காலநிலை பிரச்சினை உள்ளடங்களாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்து மீறலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளடங்களாக பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த கிராம மக்கள் மிகவும் சிறப்பாக சித்திரை புத்தாண்டு மற்றும் மே தினத்தை ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்ந்து உள்ளனர்.
சாந்திபுர கிராமத்தின் வளரும் நட்சத்திரங்கள் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மரடோனாவின் தலைமையில் சாந்திபுர இளைஞர்கள் யுவதிகள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் இணைந்து கூட்டாக நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் கயிறுழுத்தல்,கால்பந்தாட்டம்,கி றிக்கெட்,வொலிபோல்,சருக்குமரம் ஏருதல் உள்ளடங்களாக பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றதுடன் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசீல்களும் வழங்கி வைக்கப்பட்டது
அதே நேரம் பனங்கட்டுகொட்டு புனித சூசையப்பர் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த மே தின நிகழ்வும் மன்னார் எமில் நகர் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக இடம் பேற்றமை குறிப்பிடத்தக்கது
மன்னார் சாந்திபுரத்தில் சிறப்பாக இடம் பெற்ற மே தின நிகழ்வுகள்
Reviewed by Author
on
May 06, 2024
Rating:

No comments:
Post a Comment