அண்மைய செய்திகள்

recent
-

கத்தாரில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சாம்பியனான ப்ளூ ஜெர்சி அணி!

 இலங்கை சேர்ந்த ஆர்.எஸ்.எம் விளையாட்டு கழகமானது தொடர்ந்து இரண்டு வருடங்களாக கத்தாரில் கிரிக்கெட் சுற்றுப்போட்டியை நடத்தி வருகிறது. இவ்வருடம் இலங்கை இளைஞர்களுக்கு இடையில் சீசன் 4 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில்  இருநூறு கழகங்கள் பங்கு பற்றி அதில் 16 கழகங்கள் தெரிவு செய்யப்பட்டு இறுதி போட்டி நடைபெற்றது.


இதில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய ப்ளூ ஜெர்சி அணி மற்றும் மூதூர் கிரிக்கெட் பாய்ஸ் அணிகளிலே முதலில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மூதூர் கிரிக்கெட் பாய்ஸ் அணியினர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 10 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 101 ஓட்டங்களை பெற்றனர்.


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ப்ளூ ஜெர்சி அணியினர் 8.2 ஓவர் நிறைவில் 2 விக்கெட் இழப்புக்கு 105 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றனர். குறித்த சுற்றுப் போட்டித் தொடரின் ஆட்ட நாயகனாக அப்துல் மஜீத் அவர்களும் இறுதிப்போட்டியின் ஆட்ட நாயனாக பவ்ஸான் அவர்களும் தெரிவு செய்யப்பட்டதோடு சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும்,கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.




கத்தாரில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சாம்பியனான ப்ளூ ஜெர்சி அணி! Reviewed by Author on July 14, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.