வட்டுக்கோட்டையில் பத்து போத்தல் கசிப்புடன் பெண் கைது!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் பெண்ணொருவர் 10 போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் தலைமையிலான குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றினை பொலிஸார் முற்றுகையிட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
அதன்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 போத்தல் கசிப்பினை பொலிஸார் கைப்பற்றியதுடன், கசிப்பை விற்பனை செய்வதற்காக தயார்ப்படுத்தி வைத்திருந்த அவ்வீட்டில் இருந்த 47 வயதான பெண்ணையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணையும் கைப்பற்றப்பட்ட கசிப்பையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த பெண் ஏற்கனவே கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் கைதாகி நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Reviewed by Author
on
July 14, 2024
Rating:


No comments:
Post a Comment