மன்னாரில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்-பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மன்னார் பஜார் பகுதியில் இன்று (3) செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம் பெற்றது. இடம்பெற்றது.
-மன்னாரிற்கு இன்று செவ்வாய்க்கிழமை (3) மதியம் வருகை தந்த ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களை சந்தித்து கலந்துரையாடிய தோடு,ஆயரிடம் ஆசி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.
குறித்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் களும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன்,ரவூப் ஹக்கீம், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹிருணிகா பிரேமச்சந்திர,சுஜீவ ஹேமசிங்க,அர்ஜுன ரணதுங்க, ஹுனைஸ் பாரூக், ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர்கள்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உள்ளூராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள்,உப தலைவர்கள்,உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Reviewed by Author
on
September 03, 2024
Rating:













No comments:
Post a Comment