கிளிநொச்சியில் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடிப்போக்கு - உருத்திரபுரம் பகுதியில் இன்று (25) நண்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய, ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு
Reviewed by Vijithan
on
May 25, 2026
Rating:
Reviewed by Vijithan
on
May 25, 2026
Rating:


No comments:
Post a Comment