அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வெள்ள அனர்த்தம்; ஓலைத்தொடுவாய் இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள  மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் ரவிகரன் எம்.பி

மன்னார் வெள்ள அனர்த்தம்; ஓலைத்தொடுவாய் இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள  மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் ரவிகரன் எம்.பி

மன்னாரில் வெள்ள அனர்த்தப்பாதிப்புக் காரணமாக மன்னார் - ஓலைத்தொடுவாய் றோமன்கத்தோலிக்க அரசினர் தமிழ்கலவன் பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மகமகளை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 24.11.2024இன்று சந்தித்து கலந்துரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்துகொண்டார்.

காற்றாலை திட்டத்தின்போது வடிகால்கள் மூடப்பட்டதனாலேயே ஓலைத் தொடுவாய் பகுதியில் வெள்ளப் பாதிப்பு அதிகரித்திருப்பதாக மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.

இவ்வாறு காற்றாலைத் திட்டத்தின்போது மூடப்பட வாய்க்கால்களை மறுசீரமைப்புச்செய்தால் வெள்ள அனர்தத்தைக் குறைக்கமுடியும் எனவும் அதற்கு உரிய நவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன், அதேவேளை நுளம்பு வலைக்கான கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டது.

இந் நிலையில் வாய்க்கால்களை மறுசீரமைப்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டதுடன்,  நுளம்புவலை தொடர்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மன்னார் மாவட்ட செயலாளரின் கவனத்திற்குகொண்டுவந்ததையடுத்து, இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களுக்கு நுழம்பு வலைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.














மன்னார் வெள்ள அனர்த்தம்; ஓலைத்தொடுவாய் இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள  மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் ரவிகரன் எம்.பி Reviewed by Author on November 25, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.