வரலாற்றில் முதல் தடவை... சிங்கள தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக ஒரு தமிழன்!
இலங்கையில் உள்ள சிங்கள தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக வரலாற்றில் முதல் தலைவராக சிறுபான்மை இனத்தவர் ஒருவர் இம்முறை தெரிவாகியுள்ளார்.
நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் ஐ.தே.க போட்டியிட்டது. அதில் ஜீவன் தொண்டமான் மட்டும் தெரிவானார். அவரே அக்கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவருமானார்.
ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் மிகப் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றும், 1946, செப்டம்பர்,06, ம் திகதி ஆரம்பித்த இந்த கட்சியானது.
04-02-1948 ல் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இடம்பெற்ற பின்னர் முதலாவது அரசை அமைத்த கட்சி என பெருமை பெற்ற கட்சி இதுவாகும். பின்னரும் பல தடவைகளில் ஐ.தே.க. ஆளும் கட்சியாக இருந்துள்ளது.
ஐ.தே.க கட்சியின் முதல் தலைவரும், முதல் சுதந்திர அரசின் பிரதமராகவும் இருந்தவர் டி. எஸ். சேனாநாயக்க, ட்டலி செனநாயக்கா, ரணில் விக்கிரமசிங்க என ஆட்சி அதிகாரத்திலும், எதிர்கட்சியாகவும் பல ஆண்டுகளாக இலங்கை அரசியலில் தடம்பதித்த கட்சியின் இன்றைய நிலை இதுவே என பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
Reviewed by Author
on
December 06, 2024
Rating:


No comments:
Post a Comment