மன்னாரில் சூடு பிடித்துள்ள பண்டிகைக்கால வியாபாரம்.
நத்தார் மற்றும் புதுவருட பண்டிகை காலத்தை முன்னிட்டு மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் தற்காலிக பண்டிகை கால வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது பண்டிகை கால வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளது.
மன்னார் நகர சபையினால் கேள்வி கோரல் அடிப்படையில் சுமார் 300க்கும் மேற்பட்ட வியாபார நிலையங்கள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம் பெற்று வருகிறது.
உள்ளூர் மற்றும் தென் பகுதி வியாபாரிகள் இடத்தை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 20 ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை குறித்த பண்டிகை கால வியாபார நடவடிக்கைகள் இடம் பெறவுள்ள துடன் தற்போது மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் மன்னார் நகர் பகுதிக்கு வருகை தந்து பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
கடந்த காலங்களை விட இம்முறை அதிகமாக, விற்பனை நிலையங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் மன்னார் மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
இதேவேளை இம்முறை மன்னார் நகரசபைக்கு பண்டிகை கால வியாபார நிலையங்கள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மையினால் மூன்று கோடியே இருபது லட்சம் ரூபாய்க்கு அதிகமான வருமானம் கிடைத்துள்ளது.
குறித்த நிதியானது 2024 ஆம் ஆண்டிற்கான மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு செலவிடப்படவுள்ளது
Reviewed by Author
on
December 24, 2024
Rating:






No comments:
Post a Comment