மன்னார் நகரசபை சிறுவர் பூங்கா புணர் நிர்மாண பணிகள் ஆரம்பம்
மன்னார் நகர் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவை மீள் புணரமைப்பு செய்யும் நடவடிக்கை மன்னார் நகரசபை செயலாளரின் வழிகாட்டலுக்கு அமைய ஆரம்பிக்கப்பட்டுள்ளது
நீண்ட காலங்களாக புணரமைக்கப்பாடமல் பூங்கா காணப்பட்ட நிலையில் நகரசபையின் 2024 ஆண்டுக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் பூங்காவானது புணரமைப்பு செய்யப்படவுள்ளது
குறிப்பாக சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளடங்களாக,நீர்,மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு செயற்பாடுகளை செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படதன் அடிப்படையில் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
அதில் முதல் கட்டமாக 15 இலட்சம் ரூபா செலவில் புணர் நிர்மாணம் செய்யப்பட்டு சிறுவர் பூங்காவானது இம்மாத இறுதியில் பாவனைக்கு கையளிக்கப்படவள்ளமை குறிப்பிடத்தக்கது
Reviewed by Author
on
January 07, 2025
Rating:


No comments:
Post a Comment