இலங்கையில் யானைகளை காப்பாற்ற AI தொழில்நுட்பம்!
இலங்கையில் காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்க AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு உபகரணமொன்றை பரிசோதிப்பதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு முடிவு செய்துள்ளது.
அதன்படி நாளை மறுதினம் முதல் கொழும்பிலிருந்து மாத்தளைக்கு செல்லும் ரயிலில் இந்த உபகரணம் பொருத்தப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
சோதனைகளைத் தொடர்ந்து, மட்டக்களப்பு பாதையில் இரவில் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் இந்த சாதனம் பொருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த சாதனம் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பேராசிரியர் லிலாந்த சமரநாயக்க உள்ளிட்ட குழுவால் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment