அண்மைய செய்திகள்

recent
-

புத்தாண்டுப் பலகாரங்களுக்கான விலை அதிகரிப்பு

 கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் புதுவருட உணவு மேசை ஒன்றை தயார்படுத்துவதற்கான செலவு 7 சதவீதமாக அதிகரித்துள்ளது என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


2024 மார்ச் மாதம் முதல் 2025 மார்ச் மாதத்திற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மூலப்பொருட்களின் விலைகளில் 7% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.


இதற்கு முதன்மையாக, தேங்காய் விலை மற்றும் தேங்காய் எண்ணெய் விலைகள் முறையே 80% மற்றும் 40%ஆல் அதிகரித்தமையே காரணமாகும். ஏனைய பெரும்பாலான பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன அல்லது மாற்றமடையவில்லை.


பாரம்பரிய புத்தாண்டு இனிப்புப் பண்டங்களில் பொதுவாக பாற்சோறு, கொக்கிஸ், வாழைப்பழம், அலுவா, பணியாரம், தொதல், பயத்தம் பணியாரம் மற்றும் பட்டர் கேக் ஆகியவை பெரும்பாலும் இடம்பிடிக்கும்.


இதேவேளை, இந்த வருடம் இணையத்தின் ஊடாக பலகாரங்கள் அதிகளவில் கொள்வனவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


புத்தாண்டு உணவு மேசையில் பிரதான அங்கம் வகிக்கும் பலகாரம் ஒன்று இணையத்தின் ஊடாக 100 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.


மேலும் ஆஸ்மி இனிப்புவகை ஒன்றின் விலை 170 ரூபாய்க்கு விற்பனையாகின்றது.


தேன்குழல் வகை இனிப்பு (ஜிலேபி) ஒன்றின் விலை 100 ரூபாவாகவும், கொக்கிஸ் ஒன்றின் விலை 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை இணையத்தின் ஊடாக விற்பனை செய்யப்படுகின்றது.




புத்தாண்டுப் பலகாரங்களுக்கான விலை அதிகரிப்பு Reviewed by Vijithan on April 12, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.