வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சில இடங்களில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் எனவும், மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய பொதுமக்களை மிகவும் அவதானமாக செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் மத்திய, சப்ரகமுவ, தெற்கு, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் நாளை (13) மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும், புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 5 முதல் 14 வரை இலங்கையைச் சுற்றியுள்ள அட்சரேகைகளில் சூரியன் வடக்கு நோக்கிப் புலப்படும்போது வெப்பநிலை உச்சத்தை அடையும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை மதியம் 12:11 மணிக்கு துணுக்காய், ஒலுமடு, ஒட்டுசுட்டான், குமுளமுனை மற்றும் செம்மலை பகுதிகளில் வெப்பநிலை உச்சத்தை அடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Reviewed by Vijithan
on
April 12, 2025
Rating:

No comments:
Post a Comment