தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்; பொலிஸார் அராஜகத்தால் மக்கள் அதிருப்தி!
வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று காலை வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியை இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், வாகன சாரதியோருவர் வர்த்தக நோக்கத்திற்காக குருமன்காட்டு சந்தியில் வாகனத்தை நிறுத்தியபோது வாகனத்தை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதி
வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை இறக்குவதினால் சிறிது நேரம் கால அவகாசம் தருமாறு வாகன சாரதி கோரிய நிலையில் போக்குவரத்து பொலிஸார் வாகன திறப்பினை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது வாகனத்தினை நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தினை நிறுத்தியமை என சிங்கள மொழியில் பொலிஸார் தண்டப்பத்திரம் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரியமையினால் வாகன சாரதி - போக்குவரத்து பொலிஸாருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி, கடமைக்கு இடையூறு என தெரிவித்து குறித்த வாகன சாரதியினை முச்சக்கரவண்டியில் பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றி செல்ல முற்பட்டதாக பதட்டமான நிலமை ஏற்பட்டது.
சாரதி, முச்சக்கரவண்டியில் ஏற மறுப்பு தெரிவித்தமையடுத்து போக்குவரத்து பொலிஸார் குறித்த வாகன சாரதியினை தலையை பிடித்து இழுத்து கையை பிடித்து அமுக்கி முச்சக்கரவண்டியில் ஏற்றி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச்சென்றனர்.
மேலும் வாகன சாரதி மீது வவுனியா போக்குவரத்து பொலிஸார் வழக்கு தாக்கல் மேற்கொண்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். இந்நிலையில் பொலிஸாரின் இந்த அடாவடி அங்கிருந்த மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
Reviewed by Vijithan
on
April 12, 2025
Rating:


No comments:
Post a Comment