காய்ச்சல் உள்ள மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
டெங்கு, சிக்குன்குன்யா மற்றும் இன்ஃபுளுவென்சா அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்த்துக்குமாறு சுகாதார அதிகாரிகள் பெற்றோரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதிக காய்ச்சல், மூட்டு வலி அல்லது சோர்வு போன்ற அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளுக்கு ஓய்வு முக்கியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நோய்வாய்ப்பட்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாமல், ஏனையோருக்கும் தொற்று பரவும் என லேடி ரிஜ்வே வைத்தியசாலை ஆலோசகர் குழந்தை மருத்துவ நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோயாளர்கள் பதிவாகியுள்ளன.
Reviewed by Vijithan
on
June 13, 2025
Rating:


No comments:
Post a Comment