மதுபோதையில் 20 பேர் கொண்ட குழு அடாவடி - 8 பேர் கைது!
மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா ஆலயத்தின் மகிமைமிக்க மாதா சுருவத்தை மதுபோதையில் உடைத்து சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் வேலணையை சேர்ந்த 8 பேரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உள்ளடங்கலாக 8 பேரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா ஆலயத்தின் மாதா சுருவத்தை மதுபோதையில் இருந்த 20 பேரடங்கிய கும்பல் ஒன்று உடைத்து சேதப்படுத்தியதாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு குறித்த ஆலய நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்திருந்த நிலையில் பொலிஸாரின் துரித நடவடிக்கையை அடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏனையோர் கைதானவர்களின் தகவலின் அடிப்படையில் தேடப்பட்டு வருகின்றனர்.
அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளை அடுத்து குறித்த நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் - தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உள்ளடங்கலாக 20 பேர் அடங்கிய குழுவினர் நேற்றைய தினம் (25) குறித்த ஆலயத்தின் பகுதியில் இருந்து மது அருந்தியதாகவும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் சுற்றுலாவுக்காக வருகைதந்த சுற்றுலா பயணிகளுடன் தகாதவார்த்தைகளால் நக்கல் கதைகள் கூறி முரண்பட்டாதகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியில் கடும் மதுபோதையில் இருந்த குறித்த குழுவினர் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 50 இலட்சம் பெறுமதியான மாதா சுருவத்தை அடித்து முழுமையாக உடைத்து சேதமாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கிருஸ்தவ ஆலயத்தின் சுருவத்தை உடைத்ததை அடுத்து குறித்த ஆலய நிர்வாகத்தினர் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உட்பட 8 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மதுபோதையில் 20 பேர் கொண்ட குழு அடாவடி - 8 பேர் கைது!
Reviewed by Vijithan
on
July 26, 2025
Rating:
Reviewed by Vijithan
on
July 26, 2025
Rating:


No comments:
Post a Comment