செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 02 என்புத் தொகுதிகள் அடையாளம்
செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 02 என்புத் தொகுதிகள் புதிதாக இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 11ஆவது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு இன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 47 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றில் 44 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 02 என்புத் தொகுதிகள் அடையாளம்
Reviewed by Vijithan
on
July 06, 2025
Rating:
Reviewed by Vijithan
on
July 06, 2025
Rating:


No comments:
Post a Comment