புதிய வரலாறு எழுதிய தேவன் பிட்டி விளையாட்டு கழகம்.
தேவன் பிட்டி புனித .சவேரியார் விளையாட்டு கழகத்தின் அனுசரணையில் வருடா வருடம் இடம்பெறும் புனித சவேரியார் வெற்றிக்கின்ன உதை பந்தாட்ட போட்டியானது இந்த வருடம் (2025) 45 ஆவது வருடமாக இடம்பெற்றது .
இப் போட்டிகளில் மன்னார் மற்றும் பூநகரி உதைப்பந்தாட்ட சம்மேளனங்களுக்கு உட்பட்ட 48 விளையாட்டு கழகங்கள் பங்கு பெற்ற இந்த போட்டியில் வெற்றி கோப்பையிணையும், பரிசு தொகையான ரூபா.200, 000/=(இரண்டு லட்சம் ரூபாய்)அந்தோணியார் புரம் சென். ஆண்டனிஸ் விளையாட்டு கழகம் தட்டிக் கொண்டது.
மிக சிறப்பாகவும் சரியான திட்டமிடலுடனும் தேசிய மட்ட போட்டிகளை ஒத்த முறையில் இந்த இறுதிப் போட்டி நிகழ்வுகளானது மிக சிறப்பாகவும், பாராட்டப்பட வேண்டியதும், எதிர்பார்க்க முடியாததுமான ஓர் சிறப்பான நிகழ்வாக இடம் பெற்றது. இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் அவர்களும் தேவன்பிட்டி மற்றும் அந்தோணியார் புர பங்குத் தந்தையர்களும், இன்னும் பிரதேச சபை உறுப்பினர்கள் ,பூநகரி, மன்னார் உதை பந்தாட்ட சம்மேளனங்களின் உயர்மட்ட குழுவினர், இன்னும் பல பிரமுகர்கள் பங்கு கொண்டிருந்தனர். இறுதிப்போட்டியை காண்பதற்கு மைதானத்தின் நான்கு பக்கமும் பல நூற்றுக்கணக்கான மக்கள் ஆவலுடன் திரண்டு இருந்தார்கள்.
இந்த சிறப்பான நிகழ்வை ஒழுங்குப்படுத்தி நடத்தி முடித்த தேவன்பிட்டி புனித. சவேரியார் விளையாட்டுக் கழகத்திற்கு எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .
இந்த இறுதி போட்டிகளுக்கான முற்றுமுழுதான ஊடக அனுசரணையினை "அனோ மீடியா" வழங்கி இருந்தது.
சென்ட். ஆண்டனிஸ் விளையாட்டு கழகம் பெற்றுக்கொண்ட பணத்தில் ரூபா ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தேவன்பிட்டி ஆலய கட்டிட நிதிக்காக வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
July 07, 2025
Rating:
.jpg)












No comments:
Post a Comment