அதிகார பகிர்வு ஊடாகவே நாட்டையும் இளைஞர்களின் எதிர்காலத்தையும் கட்டி எழுப்பலாம்
யாழில் முன்னெடுக்கப்பட்டு வந்த செம்மணிப் புதைகுழி விசாரணையில் உண்மை, நீதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தலைவர் சி. வி. கே. சிவஞானம் மற்றும் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களால் கட்சியின் சார்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு முன்வைத்த ஐந்து கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (11) இடம்பெற்ற பாராளுமன்ற உரையின் போது 18 வயதிற்கு கூடிய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துதல் அல்லது அவர்களுக்கான கொடுப்பனவை வழங்குதல் என்னும் தலைப்பில் விசேட பிரேரணை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வௌியிட்ட இரா.சாணக்கியன், நமது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையில் இவ் விடையமானது பேச்சளவில் மட்டுமே சாத்தியமாக காணப்படும். ஆனால் இலங்கையில் அதிகார பகிர்வு ஊடாகவே எமது நாட்டையும் இளைஞர்களின் எதிர்காலத்தையும் இலகுவாக கட்டி எழுப்பக்கூடிய பொறிமுறையை உருவாக்க முடியுமெனவும் குறிப்பிட்டார்

No comments:
Post a Comment