அண்மைய செய்திகள்

recent
-

-மன்னாரில் ஆரம்பமானது விடத்தல் தீவு பன்னாட்டு மாநாடு

 மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தின் பன்னாட்டு மாநாடு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (11) காலை 8.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பமானது.


குறித்த  மாநாடு விடத்தல் தீவு கிராமத்தைச் சேர்ந்த  துறைசார் வல்லுனர்கள். கல்விமான்கள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றும் நபர்கள் ஒன்று சேரும் ஒரு அரிய சந்திப்பாக  குறித்த நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (11) காலை ஆரம்பமானது.


குறித்த நிகழ்வு 2 வது நாளாக நாளை  (120 சனிக்கிழமையும் இடம்பெற உள்ளது.


மேலும்  இம் மாநாடு பொருளாதாரம் ,கல்வி, சுற்றுச்சூழல்,சமயம், கலாச்சாரம்,பண்பாடு மற்றும் விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் நடைபெறும் நிகழ்வுகளை ஆய்வு செய்து ஆவணப் படுத்துவதோடு இவ்விடயங்களில் பரஸ்பர புரிதலை ஏற்படுத்தி மக்களின் வாழ்வியலை மேம் படுத்தும் ஒரு முக்கிய அமர்வாக  இடம்பெற்று வருகின்றது.


மன்னாரில் அமைந்துள்ள விடத்தல்தீவு கிராமத்தின் சிறப்பும், பண்பாடும் மற்றும் கலை கலாசார பாரம்பரியமும் இம்மாநாட்டின் 2ஆம் நாள் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது.


 போரின் அனர்த்தங்களினால் உருக்குலைந்து போன விடத்தல் தீவு போன்ற கிராமங்களின் பொருளாதார, சமூக கலாசார அம்சங்களை மீள்கட்டியெழுப்புவதற்கும் ஆவணப்படுத்துவதற்குமான இம் மாநாடு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  (11) காலை 8.30 மணியளவில் முதல் நாள் நிகழ்வுகள் ஆரம்பமானது.


இதன் போது விருந்தினர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து மாலை அணிவிக்கப் பட்டு வாத்திய இசையுடன் நகரசபை மண்டபம் நோக்கி அழைத்து வரப்பட்டனர்.


குறித்த முதல் நாள் நிகழ்வில் விருந்தினர்களாக வவுனியா பல்கலைக்கழக உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,உள்ளடங்களாக அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.






















-மன்னாரில் ஆரம்பமானது விடத்தல் தீவு பன்னாட்டு மாநாடு Reviewed by Vijithan on July 11, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.