அரச உத்தியோகத்தர் தனி நபர் போராட்டம்
திருகோணமலையில் அரச உத்தியோகத்தர் ஒருவர் இன்று (13) கல்வி அமைச்சின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
தாபன நடைமுறைகளை மீறி அதிகார துஸ்பிரயோகம் செய்த கிழக்கு மாகாண அரச அதிகாரிகள் தொடர்பில் விசாரணை வேண்டும்
அரச உத்தியோகத்தர்களது கருத்து சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகையை ஏந்தியவாறு அரச உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
புதிய கல்வி சீர்திருத்த செயல்முறை தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றிற்காக திருகோணமலையில் உள்ள கல்வி அமைச்சிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரும் முகமாக குறித்த உத்தியோகத்தர் தனிமனித போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
Reviewed by Vijithan
on
July 13, 2025
Rating:


No comments:
Post a Comment