இஷாரா செவ்வந்தியின் தாயார் மரணம்
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இஷாரா செவ்வந்தியின் தாயார் கடந்த 11 ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் சகோதரர் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இதற்கிடையில், கெஹல்பத்தர பத்மே, அவரது கள்ளக்காதலி மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோர் மலேசியாவில் இருந்து தாய்லாந்திற்கு படகு மூலம் தப்பிச் செல்லும் போது கடந்த 9 ஆம் திகதி மலேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
பின்னர், இலங்கை பொலிஸூம் இந்த செய்தியை உறுதிப்படுத்திய நிலையில், பின்னர் அவர்களை அழைத்து வர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவை அந்த நாட்டிற்கும், மற்றொரு அதிகாரிகள் குழுவை தாய்லாந்திற்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இருப்பினும், கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட மூவரும் மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அவர்களை அழைத்து வரச் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நாளை நாடு திரும்பவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
Reviewed by Vijithan
on
July 13, 2025
Rating:


No comments:
Post a Comment