அண்மைய செய்திகள்

recent
-

ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் இடம்பெறவுள்ள சிவமயம் 2025" நிகழ்வு! கலை ஆர்வலர்களை கலந்துகொள்ளுமாறு அழைப்பு

 ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் இடம்பெறவுள்ள  சிவமயம் 2025" நிகழ்வு! கலை ஆர்வலர்களை கலந்துகொள்ளுமாறு  அழைப்பு


ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் இடம்பெறவுள்ள  சிவமயம் 2025" நிகழ்வு! கலை ஆர்வலர்களை கலந்துகொள்ளுமாறு  ஏற்ப்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்


வருங்கால  சந்ததிக்கு பரதக்கலையையும் இசைக்கலையையும் வளர்க்கும் எண்ணத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக .ஐக்கிய இராச்சியத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிருத்திய சங்கீத கலைக்கூடம்(ஐக்கிய இராச்சியம்) 1000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை இரண்டு துறையிலும் உருவாக்கி தற்போது 200 க்கும் மேற்பட்ட மாணவர்களை இரண்டு துறையிலும் வளர்த்து வருகின்றது. 


அதற்கு சான்றாக 2020 ம் ஆண்டில் பரதக்கலையின் பிறப்பிடமாக போற்றப்படும் ஸ்ரீசிதம்பர நடராஜர் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்வையும் கடந்த ஆண்டு 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலிலும், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலும் 52 மாணவர்கள் கொண்ட குழுவாக 'சமர்ப்பணம் 2024" என்னும் நிகழ்வை நடாத்தி பெரும் பாராட்டை பெற்றது. 


இதனைத் தொடர்ந்து இவ்வருடமும் இலங்கையை பூர்வீர்கமாக கொண்ட ஆசிரியையினால் உருவாக்கப்பட்ட அமைப்பாகவும் இலங்கையின் வடக்கு மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட பெற்றோரின் குழந்தைகளும் நிருத்திய சங்கீத கலைக்கூடத்தில் பயின்றுவரும் நிலையில் நிருத்திய சங்கீத கலைக்கூடம்(ஐக்கிய இராச்சியம்) இல் இருந்து வருகைதரும்  பிள்ளைகளினால்

பரதத்தின் தந்தையாக போற்றப்படும் சிவன் ஆலயத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் மிகப்பிரமாண்டமாக 'சிவமயம் 2025* என்னும் நிகழ்வை நடாத்த தீர்மானித்து


அந்தவகையில் நிருத்திய சங்கீத கலைக்கூடம்(ஐக்கிய இராச்சியம்) இல் இருந்து வருகைதரும் பிள்ளைகளின் கலை நிகழ்வுகளை உள்ளடக்கிய சிவமயம் 2025" நிகழ்வானது ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபையினரின் ஒழுங்குபடுத்தலில்  எதிர்வரும் 29.07.2025 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் இடம்பெறவுள்ளது


நிருத்திய சங்கீத கலைக்கூடம் இலண்டன் நிறுவுனர் 

திருமதி ஸ்ரீமதி ராதிகா ராலோகநாதன் தலைமையில் இடம்பெறவுள்ள நிலையில் பிரதம விருந்தினராக கௌரவ வடமாகாண ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும் கௌரவ விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட கௌரவ  அரசாங்க அதிபர் திரு  அ.உமாமகேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கௌரவ ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திரு  இ.நிசாந்தன்அவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்


இந்த நிகழ்வில் கலை ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு 

ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபையினரின் அழைப்பு விடுத்துள்ளனர்


சிவமயம் 2025 நிகழ்வானது நிருத்திய சங்கீத கலைக்கூட ஆசிரியை திருமதி தீபா இராமகிருஸ்ணன் அவர்களின் வரவேற்பு உரையுடன் ஆரம்பமாகி


நிருத்திய சங்கீத கலைக்கூட மாணவர்களின் கர்நாடக இசைக் கோர்வையும் 


அதனைத் தொடர்ந்து நிருத்திய சங்கீத கலைக்கூட மாணவர்களின் அறிமுக உரையும்

தொடர்ந்து 

1. மூசிக வாகன 

2. மல்லாரி 

3. குனித்த புருவமும் 

4. ஆடிக்கொண்டார் 

5. நடேசர் கௌத்துவம் 

6. சொல்லாலே இயம்பிடல் 

7. தக தக என்று ஆடவா 

8. நடனம் ஆடினார்

9. கின் கினி

10. பிட்டுக்கு மண் சுமந்த 

11. ஈழவள நாடு எங்கள் சிவ பூமி

12. சிவ தாண்டவம் (ருத்ரம்) ஆகிய  நடன  நிகழ்வுகளும் இடம்பெற்று  அதனைத்தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையும் கௌரவ விருந்தினர் உரையும் சிறப்பு விருந்தினர் உரையும் விருந்தினர்கள் கௌரவிப்பு நிகழ்வும்  பங்கேற்பாளர்களுக்கு நினைவு சின்னம் வழங்கல் /கௌரவிப்பு நிகழ்வும் 

தொடர்ந்து 

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபையினால் ஆசிரியர்களான ஸ்ரீமதி ராதிகா ராஜலோகநாதன், ஸ்ரீமதி தீபா ராம்கிருஸ்ணன். மிருதங்க கலாவித்தகர் திருமலை திரு சின்னராசா காண்டீபன், வயலின் இசைக் கலைஞர் இசைக்கலைமணி திரு சிங்காரவேலன் திருமாறன்.

ஸ்ரீமதி சுஜாதா சிறிவத்ஸ்.மற்றும்

ஒப்பனைக்கலைஞர் திரு கந்தசாமி தர்சன் ஆகியோருக்குப் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது 


குறித்த நிகழ்வில் கலை ஆர்வலர்களை கலந்துகொள்ளுமாறு  அழைப்பு விடுத்துள்ளனர் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபையினர்








ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் இடம்பெறவுள்ள சிவமயம் 2025" நிகழ்வு! கலை ஆர்வலர்களை கலந்துகொள்ளுமாறு அழைப்பு Reviewed by Vijithan on July 27, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.