யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளைஞனின் பரிதாப மரணம்; கதறும் குடும்பம்
யாழில் உடல் சுகயீனம் ஏற்பட்ட இளைஞர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாவற்குழி தெற்கு - கைதடி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவருக்கு காய்ச்சலுடன் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதுடன் இரவு 7 மணிக்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணைகளின் பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
August 03, 2025
Rating:


No comments:
Post a Comment