தமிழர் பகுதியில் காயங்களுடன் ஆற்றில் மிதந்த குடும்பஸ்தர்
அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் 53 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தரின் சடலம் இன்று (03) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம், செங்கலடி பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்ட குறித்த குடும்பஸ்தரின் சடலத்தில் கழுத்து, தலை மற்றும் தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் காணப்படுவதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விரிவான விசாரணை
குறித்த நபர் மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தவர். நேற்று (02) முதல் அவர் காணாமல் போனதாக அரிசி ஆலை உரிமையாளர் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்தார்.
மேலும், அம்பாறை தடயவியல் பொலிஸார் மோப்பநாய் உதவியுடன் சந்தேக நபர்கள் மற்றும் தடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment