வீதி விபத்துகளில் மூவர் பலி
நாட்டின் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விபத்துகள் நேற்று (09) நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நேற்று அதிகாலை, மதவாச்சி பொலிஸ் பிரிவில் கெபிதிகொல்லேவ - மதவாச்சி வீதியில் இரண்டாவது கிலோ மீட்டர் மைல்கல் அருகில் மதவாச்சி திசை நோக்கிச் சென்ற வாகனம், வீதியோரத்தில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியது.
விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர் மதவாச்சியைச் சேர்ந்த 39 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், படபொல பொலிஸ் பிரிவில் உடுவில, எத்கந்துர வீதியில் தொரல சந்திக்கு அருகில், எத்கந்துர திசையிலிருந்து தொரல திசை நோக்கிச் சென்ற துவிச்சக்கர வண்டியொன்று வீதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த வாகனத்துடன் மோதியுள்ளது.
விபத்தில் துவிச்சக்கர வண்டி செலுத்துனர் பலத்த காயமடைந்து உடுவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இறந்தவர் படபொல பகுதியைச் சேர்ந்த 61 வயதானவர் என தெரியவந்துள்ளது.
அத்துடன் வரகாபொல பொலிஸ் பிரிவில் கொழும்பு - கண்டி வீதியில் மாஹேனபாத சந்திக்கு அருகில் கொழும்பு திசை நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம், வீதியை கடந்த பாதசாரி மீது மோதியது.
விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி, வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இறந்தவர் தொலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 83 வயதானவர் என தெரியவந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வீதி விபத்துகளில் மூவர் பலி
Reviewed by Vijithan
on
August 10, 2025
Rating:
.jpg)
No comments:
Post a Comment