'எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதியான உங்கள் கணவர்' என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எழுதிய கடிதத்தால் எழுந்துள்ள சர்ச்சை.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் அண்மையில் மாவட்டத்தில் சுகாதார உத்தியோகத்தர் ஒருவருக்கு எழுதிய கடிதம் பரவலாக எதிர்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கடிதமானது குடும்ப நல சுகாதார அலுவலரான இன்பராசா விஜயலட்சுமி என்பவருக்கு எதிராக எழுதப் பட்டதோடு,அவரது கணவர் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியாக உள்ள நிலையில் அவரை குறித்த கடிதத்தில் இணைத்து 'எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதி' என குறிப்பிட்டு குறித்த கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார்.
-குறித்த கடிதத்தில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதி என குறிப்பிட்டுள்ளமை விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது
.மன்னார் மக்கள் இவர் மீது மிகப் பெரும் நம்பிக்கையும் மரியாதையும் கொண்டிருந்தாலும் இவருடைய செயல்பாடுகள் காலத்துக்கு காலம் மாறும் அரசாங்கங்களுக்கு பிற்பாட்டு பாடுவது போலவே அமைந்துள்ளது
அதற்கு உதாரணமாக பொருளாதார நெருக்கடியில் இலங்கை நாடு சிக்கி இருக்கும்பொழுது "அரகலய" என்னும் போராட்டம் நாடு முழுவதிலும் வலுப்பட்டிருந்த நேரத்தில் அனைவருமே அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியை திறக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பிய வேளையில் வைத்தியர் வினோதன் அவர்கள் தான் கோடபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு என்று தெரிவித்து அக்கால பகுதியிலே முகநூலில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .
ஆனால் இவர் மக்களுக்கு தன்னை மக்களுக்கு சார்பானவர் போல் காட்டிக் கொண்டாலும் இவருடைய செயல்பாடுகள் அனைத்தும் தன்னுடைய பதவிகளையும் மேலும் சில சுய காரணங்களுக்காக மாறுகின்ற அரசாங்கத்திற்கு தாளம் தட்டுவது போல் அமைந்துள்ளது
தட் பொழுது அவர் செய்து இருப்பதும் அப்படி ஒரு விடயம் என்று வெளிப்படையாக தெரிந்து உள்ளது
தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்
விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் உரிமைக்காகவே போராடியவர்கள் என சமூக வலைதளங்களில் மருத்துவருக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளை மருத்துவரின் கடிதத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எதிராக அவருடைய பணியாளர்கள் தொடர்ந்தும் பல்வேறு குற்றச் சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர்.
பலரை பலி வாங்கும் நோக்குடன் அவர்களுக்கு இடமாற்றம் வழங்குதல்,மாதாந்த சம்பளத்தை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இவரால் சுமார் 10 ற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,அவர் என்.பி.பி.அரசாங்கத்தை ஆதரித்து தனது முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக கருத்துக்களை பரிமாறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பாதிக்கப்பட்ட பணியாளர்கள் வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளிநாடு சென்றுள்ள மையினால் அவர் நாட்டிற்கு திரும்பிய நிலையில் அவருக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
.jpg)
No comments:
Post a Comment