மன்னாரில் நீண்ட நேரமாக துண்டிக்கப்பட்ட மின்சாரம் -அசௌகரியத்திற்கு உள்ளான பொதுமக்கள்
மன்னாரில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது
நேற்றைய தினம் இந்த மின் துண்டிப்பு தொடர்பில் குறுந்தகவல்கள் வழங்கப்பட்டிருந்த போதும் குறிப்பிட்ட குறுந்தகவலில் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவித்திருந்த போதிலும் இன்றைய தினம் மாலை வேளையில் குறிப்பிட்ட நேரத்தில் மின்சார துண்டிப்பு வழமைக்கு திரும்பவில்லை
இந்த நாட்களில் பாடசாலைகளில் பரீட்ச்சைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன எனவே இவ்வாறான மின் துண்டிப்புகளினால் மாணவர்கள் இரவு நேரங்களில் கல்வி கற்பதற்கு கடினமான ஒரு சூழ்நிலை உருவாகுவதுடன் இவ்வாறான நீண்ட நேர மின் துண்டிப்பினால் மன்னார் நகர பகுதியில் அமைந்திருக்கக் கூடிய
வியாபார நிலையங்கள் மூடப்பட்டதோடு வியாபாரிகளின் வருமானமும் ஸ்தம்பிதமடைந்துள்ளது
அது மாத்திரம் இன்றி இரவு வேலைகளில் அதுவும் மழைக்காலங்களில் இவ்வாறான மின் துண்டிப்புகள் மூலம் பல்வேறு வகையான விபத்துக்கள் மற்றும் ஆபத்துக்களை பொதுமக்கள் சந்திக்க நேர்கிறது .. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என மன்னார் மக்களின் பொறுப்புள்ள ஊடகமாக நியூ மன்னார் கேட்டு கொள்கிறது

No comments:
Post a Comment