கழிப்பறை குழி வெடித்து ஒருவர் மரணம்!! தென்னிலங்கையில் சம்பவம்
காலி மாவட்டத்தின் பிலானா பகுதியில் ஒரு வீட்டின் மலசலகூட கழிவுத் தொட்டி வெடித்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹபராதுவ பொலிஸ் நிலையம் இந்த தகவலை உறுதிப்படுத்துகிறது.
உயிரிழந்தவர் கடலாவல, பிலானாவில் வசிக்கும் 56 வயதுடையவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிவாயுவை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் கழிவுநீர் தொட்டியில் கார்பைடு போன்ற இரசாயனப் பொருளைச் சேர்க்க அந்த நபர் முயன்றபோது வெடிப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
படுகாயமடைந்த அவர், உள்ளூர்வாசிகளின் தலையீட்டால் உடனடியாக காலி தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும், மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர் இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Reviewed by Vijithan
on
October 13, 2025
Rating:


No comments:
Post a Comment