தமிழகத்தில் வசித்து வந்த மன்னாரை சேர்ந்த ஒரே குடும்பத்திலிருந்து நால்வர் படகு மூலம் தாயகம் திரும்பினர்.
இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த நால்வர் கடல் வழியாக தாயகம் திரும்பி பொலிஸ்
நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் ஆண்,பெண் பிள்ளைகள் உள்ளடங்களாக நான்கு பேர் இவ்வாறு தாயகம் திரும்பியுள்ளனர்.
மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று
தமிழகத்தில் அடைக்கலம் புகுந்து முகாமில் வசித்து வந்துள்ளதாக தெரிய வருகிறது.
இலங்கையில் தற்போது போர் முடிவுற்று இயல்பு வாழ்வு திரும்புவதான செய்தியில் அடிப்படையில் நேற்று முன்
தினம் (14) இரவு தமிழ் நாட்டில் இருந்து படகில் புறப்பட்டு மன்னார் பேசாலை கடற்பரப்பை வந்தடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வந்தவர்களை கடற்படையினர் அல்லது பொலிஸார் கண்டு கொள்ளாத போதும் தாமாக அவர்கள் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்று விவரத்தைத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நால்வரும் பிணையில் செல்ல அனுமதி க்கப்பட்டுள்ளனர்
Reviewed by Vijithan
on
October 16, 2025
Rating:


No comments:
Post a Comment