மன்னாரைச் சேர்ந்த இளைஞன் கவிவர்மன் இயக்கிய திரைப்படத்திற்கு மற்றும் ஒரு சர்வதேச விருது...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடாத்தப்பட்ட "International Art & Heart Film Festival" நடாத்திய 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச குறுந்திரைப்பட விழாவில் மன்னாரைச்சேர்ந்த இளைஞன் கவிவர்மன் இயக்கத்தில் உருவான "மடமை தகர்" எனும் குறுந்திரைப்படத்தில் "Best Monologue" என்னும் விருதை
இக்குறுந்திரைப்படத்தின் முதன்மை கதாப்பாத்திரமான மன்னார் ஓலைத்ததொடுவாய், சின்ன கரிசல் பிரதேசத்தினைச் சேர்ந்த சிறுமி - (ரஞ்சித் குருஸ் சுவேதா) அவர்கள் பெற்றுக்கொண்டமை பெரும் பாராட்டிற்குறித்தானதாகும்.
தற்கொலை என்பது ஒரு தீர்வல்ல என்னும் கருத்தை முன்வைத்து உருவாக்கப்பட்ட குறித்த திரைப்படமானது அன்மையில் அவுஸ்திரெலியா நாட்டில் நடாத்தப்பட்ட சர்வதேச குறுந்திரைப்பட விழாவில் "சிறந்த இயக்குனர்" என்னும் விருதை வென்றிருந்தமையை அடுத்து
மீண்டுமொரு சர்வதேச விருதை
தன்வசப்படுத்தியுள்ளது
மன்னர் மண்ணை சார்ந்த
சிறுமி, சர்வதேச நாடொன்றில், திரைப்படத்துறையில் அங்கிகாரம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
Reviewed by Vijithan
on
October 16, 2025
Rating:

.jpg)


.jpg)






No comments:
Post a Comment