22 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்லதே பகுதியில் சுமார் 22 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் மற்றும் போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (29) காலை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
குறித்த பெண்ணை கைது செய்யும் போது, அவரிடமிருந்து 04 கிலோகிராமிற்கும் அதிகமான கொக்கேய்ன் மற்றும் 3450 இற்கும் அதிகமான போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் பொல்லதே பகுதியில் வசிக்கும் 48 வயதுடைய பெண் ஒருவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
22 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
Reviewed by Vijithan
on
January 29, 2026
Rating:
Reviewed by Vijithan
on
January 29, 2026
Rating:


No comments:
Post a Comment