தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்; பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்; பொலிஸார் குவிப்பு!
தமிழகத்தில் நாளை (23) சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு பணிகளுக்காக 1 கோடியே 47 இலட்சம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்த்துள்ளன.
தமிழகத்தில் 5 கோடியே 73 இலட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் இருக்கின்றனர். பொதுமக்கள் வாக்களிப்பதற்காக தமிழக மாநிலம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
பதற்றமான வாக்களிப்பு நிலையங்களாக அடையாளங் காணப்பட்டுள்ள இடங்களில் துப்பாக்கி ஏந்திய துணை இராணுவப்படையினரும் தமிழ்நாடு சிறப்பு பொலிஸ் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
வாக்களிப்பு தினமான நாளை மாநிலம் முழுவதும் விசேட அதிரடிப்படை வீரர்கள் 514 வாகனங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
அதேசமயம் ஏதாவது ஒரு பகுதியில் பிரச்சினைகள் அல்லது அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக நிலைமையை சீர் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.
Reviewed by Vijithan
on
April 22, 2026
Rating:


No comments:
Post a Comment