ஈஸ்டர் தாக்குதலில் பெற்றோரை இழந்த மட்டக்களப்பு மாணவன் கண்ணீர்; மறுக்கப்படும் உரிமை
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவன் ஒருவன், கடந்த 7 ஆண்டுகளாகத் தனது விருப்பத்திற்குரிய ஆங்கில மொழிமூலக் கல்வியைப் பெற முடியாமல் தவித்து வரும் அவலநிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தாக்குதல் தந்த ஆறாத வடுக்கள்: 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத் தாக்குதலில் குறித்த சிறுவன் தனது தாய் மற்றும் தந்தை இருவரையும் ஒரே நாளில் இழந்தான்.
அரச பாடசாலைகளில் இணையும் முயற்சிகள்
இத்தாக்குதலில் சிறுவனின் தங்கை தனது இரு கண்களின் பார்வையையும் முழுமையாக இழந்துள்ளார். பெற்றோரை இழந்த இவ்விரு பிள்ளைகளையும் அவர்களது சிறியதாயார் (தாயின் சகோதரி) மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வளர்த்து வருகின்றார்.
இச்சிறுவன் தரம் 6 வரை சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆங்கில மொழிமூலம் கல்வி கற்று வந்தான். தரம் 7 முதல் அந்தப் பாடசாலையில் மேல் வகுப்பு வசதிகள் இல்லாததால், மட்டக்களப்பு நகரில் ஆங்கில மொழிமூலக் கல்வி வசதியுள்ள அரச பாடசாலைகளில் இணையும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் கடந்த 7 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சிகள் அனைத்தும் அதிகாரிகளின் அலட்சியத்தாலோ அல்லது நடைமுறைச் சிக்கல்களாலோ தோல்வியிலேயே முடிந்துள்ளன.
தற்போது தரம் 10-இல் கல்வி கற்கும் அச்சிறுவன், வேறு வழியின்றி தனக்குப் பழக்கமில்லாத தமிழ் மொழிமூலப் பாடசாலையில் இணைந்து கல்வி கற்று வருகின்றான்.
இதனால் பாடங்களைப் புரிந்துகொள்வதில் பெரும் சிரமத்தையும், மேலதிக வகுப்புக்களுக்காக அதிக செலவுகளையும் எதிர்கொண்டு வருகின்றான்.
இந்நிலையில் "ஏழு ஆண்டுகள் கடந்தும் நீதிக்காகப் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?" என்ற தலைப்பில் மட்டக்களப்பு கல்லடியில் கடந்த நேற்றையதினம் (21.04.2026) நிகழ்வில் சிறுவனின் சிறியதாயார் கலந்துகொண்டு இந்த உருக்கமான வேண்டுகோளை விடுத்தார்:
Reviewed by Vijithan
on
April 22, 2026
Rating:


No comments:
Post a Comment