அண்மைய செய்திகள்

recent
-

தமிழர் பகுதியில் ஆசிரியரின் வீட்டில் நடத்தப்பட்ட சம்பவம் ; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை அலேக்காக திருடிச் சென்ற நபர், சிசிரிவி கமராவில் சிக்கியுள்ளார்.


முல்லைத்தீவு - வள்ளுவர்புரம், விசுவமடு பகுதியில் ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் நேற்று காலை திருடப்பட்டுள்ளது.




சிசிரிவி காட்சிகள் 

வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை அங்கு வந்த நபர் ஒருவர் பொறுமையாகக் காத்திருந்து திருடிச் சென்றுள்ளார்.


வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.



சிசிரிவி பதிவை வைத்துக்கொண்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் உரியவர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


குறித்த மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது





தமிழர் பகுதியில் ஆசிரியரின் வீட்டில் நடத்தப்பட்ட சம்பவம் ; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை Reviewed by Vijithan on May 09, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.