நாளை மறுதினம் வானிலையில் ஏற்படும் மாற்றம்!
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை நாளை மறுதினம் (11) குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
எனவே, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், தென், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பகுதிகளில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாளை மறுதினம் வானிலையில் ஏற்படும் மாற்றம்!
Reviewed by Vijithan
on
May 09, 2026
Rating:
Reviewed by Vijithan
on
May 09, 2026
Rating:


No comments:
Post a Comment