த.வெ.க.வுக்கு ஆதரவு ; விசிக அறிவிப்பு; முதல்வராகின்றார் விஜய்!
தமிழ்நாட்டில் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. த.வெ.க.வுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 2 இடங்களுக்காக விடுதலை சிறுத்தைகள் என்ன மாதிரியான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்ப்பு தமிழ்நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, த.வெ.க.வுக்கு ஆதரவா? என்பது தொடர்பாக இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவை தெரிவித்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
காலையில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்த த.வெ.க. தலைவர் விஜய் தற்சமயம் நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.
இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் தனது ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜூனாவிடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, தமிழக கூடுதல் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று இரவு 7.10 மணிக்கு கேரளம் புறப்பட்டு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
Reviewed by Vijithan
on
May 09, 2026
Rating:


No comments:
Post a Comment