அண்மைய செய்திகள்

recent
-

வயலுக்குச் சென்ற விவசாயி கால்வாயில் சடலமாக மீட்பு!

 வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊத்துச்சேனை வயல் பகுதிக்குச் சென்ற விவசாயி ஒருவர், கால்வாயில் உயிரிழந்த நிலையில் நேற்று (12) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 


வாகனேரி, குளத்துமடு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய செல்லத்துரை கோபால் என்ற விவசாயியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார். 

குறித்த விவசாயி, மழை பெய்து கொண்டிருந்த வேளையில் வயலுக்குச் சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரைத் தேடியபோது, கால்வாயில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். 

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், நீதிமன்ற அனுமதியைப் பெற்றுச் சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




வயலுக்குச் சென்ற விவசாயி கால்வாயில் சடலமாக மீட்பு! Reviewed by Vijithan on May 13, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.