அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய (21-07-2016) கேள்வி பதில்

கேள்வி:−
எனது அன்பிற்குரிய சட்டத்தரணி சுதன் அவர்களே!நான் மட்டக்களப்பு தேசிய கல்வியல் கல்லூரி மாணவன் நந்தகுமார்.Sir பெண்ணின் மனதை அறிவது எப்படி?அவர்களை கவர வேண்டுமாயின் என்ன வழி?

பதில்:−
அன்பான சகோதரரே! அணுவை விட மிகச் சிறிதான,சிக்கலான ஒன்று உலகில் உண்டெனில் அது கண்டிப்பாக பெண்களின் மனமாகதான் இருக்க முடியும். எதை எதையோ ஆராய முடிந்த மனித னால். பெண்களின் மனதை அறிய முடியவில்லை.அதிலும் ஆண் பெண் உறவானது மிகவும் சிக்கலானது.இந்த சிக்கலில் மாட்டி வாழ்க்கையை தொலைத்தவர்கள் பலர்.
பெண்களுக்கு என்ன பிடிக்கும்? என்கிற மிகச்சாதாரண கேள்வி சகல ஆண்களிடமும் உள்ளது.ஆனால் இந்த கேள்வியின் விடை, ஆண் பெண் உறவுச்சிக்கலை சுலபமாக தீர்த்து வைக்க உதவுகிறது. எனவே உங்களுக்காக இந்த கேள்வியின் பதிலை கண்டுபிடிக்க பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளப்பட்ட‍து அதற்காக இந்த ஆராய்ச்சிக்கு பல்வேறு ஆரோக் கியமான மற்றும் மகிழ்ச்சியான ஜோடிகளை தேர்ந்தெடுத்த‌தன் பயனாக ஆண் பெண் உறவை பலப்படுத்துவதற்காகவும் பெண்ணின் மனசை அறிவதற்காகவும்10 இரகசியங்களை கண்டு பிடித்துள்ளனர்அது பெண்களின் உண்மையான விருப்பத்தை தெரிந்துகொள்வது தான்.அதற்கு பெண்கள் விரும்பும் 10 இரகசியங்களை பட்டியலிட்டுள்ளோம்.

கரிசனம்
பெண்களுக்கு உணர்ச்சி மிகுந்த ஆண்களை மிகவும் பிடிக்கும்.அதிலும் பெண்கள் மன வருத்தத்தில் உள்ள போது ஆறுதல் அளிக் கும் ஆண்களை மிகவும் விரும்புவார்கள்.எனவே,பெண்கள் மனதளவில் சோர்ந்து இருக்கும் பொழுது,அவர்களை ஆறுதலாக தோள் மீது சாய்த்துக் கொண்டு அவர்களின் கண்ணீரை துடைப்பது,அவர்களுக்கு இடையே உள்ள இணைப்பை பலப்படுத்தும்.

பண்பு
பண்பான செயலுக்கு இன்றும் இடம் உண்டு. ரொமன்ஸைப் பொறுத்த வரை ஆண்கள் வலிமை மிகுந்தவர்களாக இருக்க வேண்டும் என பெண்கள் விரும்புகிறார்கள்.பெண்கள் தங்களுடைய நாற்காலியை தள்ளுவதற்கும் அல்லது ஒரு கதவை திறப்பதற்கும் திறமை உடையவர்கள்.ஆனாலும், ஆண்கள் இதை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.ஒரு பண்பாளராக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள்.

ஸ்டைல்
“ஆள்பாதி ஆடை பாதி” என்னும் கூற்றுக்கு ஏற்ப அடிக்கடி மாறக்கூடியது ஸ்டைல்.ஆனாலும், மனிதர்களின் சிகையலங்காரம் மற்றும் ஆடைகளை பற்றிய ஆர்வம் மாறாதது.பெண்களுக்கு இறுக்கமான ஜீன்ஸ் பிடிக்கும் என்றால், நீங்களும் இறுக்கமான ஜீன்ஸ் அணிய வேண்டும்.

குறைபாடுகள்
“பெண்கள் தனிநபர் வளர்ச்சியை நேசிக்கிறார்கள், அவர்கள் விரும்புவது சிந்தனை மற்றும் செயல்திறன் உள்ள ஒரு மனிதனைத்தான்”.மேலும் ஆண் தன்னுடைய குறைபாட்டை ஒப்புக் கொள்வது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். எடுத்துக்காட்டாக,ஒரு குறுகிய காலத்தில் நிதானத்தை இழப்பது அல்லது வேலைக்குப் பிறகும் கோபமான மனநிலையோடு இருப்பதை ஒப்புகொண்டு, அதை நிவர்த்தி செய்ய மேற்கொள்ளும் முயற்சி, பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

புகழ்தல்
பெண்கள் அவர்களின் அழகைப் பற்றி, பிறர் கூற பிரியப்படுவார்கள்.எனவே அவர்களுடைய புதிய சிகையலங்காரம் மற்றும் ஆடைகளை பற்றி புகழ்ந்து கூறுங்கள்.இது இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கும்.

வெளிப்படையான பேச்சு
பெண் தன்னுடைய உறவைப் பற்றி பேச விரும்புகிறாரெனில்,ஏதோ தவறு செய்தது போல் பயப்படாதீர்கள்.இது ஒரு நல்ல விஷயம் தான்.ஒரு நேர்மையான, திறந்த மனதுடன் கூடிய பேச்சு நெருக்கத்தை அதிகரிக்கும்.

காதல்
காதல் என்பது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.அது இரண்டு மாத காதலானலும், 20 வருட காதலானாலும் ஒன்று தான்.பெரும்பாலான பெண்களுக்கு எளிமையான காதல் சைகைகள் மிகவும் பிடிக்கும். அவர்கள் அதை மறைமுகமாக பாராட்டுவார்கள்.
பிடித்தவை என்ன பிடிக்கும் என்பதை கேளுங்கள். அதிலும் நீங்கள் விரும்புவதை அவளிடம் ஒரு நேர்மறையான மற்றும் உறுதிப்படுத்திய வழியில் கேட்பது நல்லது.

ஆதரவு
பெண்கள் பிரச்சனையில் இருக்கும் பொழுது, அறிவுரையை விட, ஆதரவையே தேடுகிறார்கள். ஆண்கள் எப்பொழுதும் தீர்வு சார்ந்த விஷயங்களை யோசித்து பிரச்சனைகளை சரி செய்யவே விரும்புவார்கள்.ஆனால் பெண்களுக்கு, பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பது ஒரு உன்னதமான மற்றும் அற்புதமான விஷயம் ஆகும்.
கவனம்
கவனித்தல் மிக முக்கியமானது. அதை பெண்கள் உணர்வது அதைவிட முக்கியமானது. தலையசைப்பது என்பது பிரச்சனைக்கு தீர்வாகாது.பெண்கள் பிரச்சனைகளை கூறும் பொழுது கொடுக்கும் ஒரு சிறு மெளனம் என்பது ஒரு கருணையுடன், அக்கறையான வழியில் பதிலை கொடுப்பதற்கு தரும் ஒரு சந்தர்ப்பம் ஆகும்.அவர்கள் தன் மேலதிகாரி ஒரு கடினமான வேலையை கொடுத்தார் என கூறினால், அவர்கள் உங்களிடமிருந்து, “நான் மிகவும் வருந்துகிறேன், உன்னுடைய வேலை இன்று முழுவதும் உன்னை ஆட்கொண்டு விட்டது” என்கிற பதிலை எதிர்பார்க்கிறார்கள் என அர்த்தம்.
புரிந்துணர்வு
பெண்ணில் சூழ் நிலைமை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளும் ஆண்களை பிடிக்கும்.உதாரணமாக பிரச்சனையிலிருக்கும் பெண்ணின் நிலைமை புரிந்து கொண்டு இதமாக பேசி அவளது மனசிற்கு ஆதரவாக நடந்து கொள்ள வேண்டும்.அதை விடுத்து தனது கருத்துக்கள்/ தீர்வுகளை வழங்க துடிக்கும் ஆண்கள் ஆர்வத்தை அடக்கிக் கொள்ள வேண்டும்.
 உங்கள் சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும்.
அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி
<20 .07.2016="" br="">
newmannar@gmail.com அனுப்பும் போது "கேள்வி-பதில்" என குறிப்பிட்டு அனுப்பவும் . 
இன்றைய (21-07-2016) கேள்வி பதில் Reviewed by NEWMANNAR on July 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.