அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் இடம் பெறவுள்ள மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி பழைய மாணவர்களின் இசை நிகழ்சி

 மன்னார் மாவட்டத்தில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் ஐக்கிய இராஜ்ஜிய பழைய மாணவர்கள் ஏற்பாட்டில் எதிர்வரும் 13 ஆம் திகதி பிரமாண்ட நேரலை இசை நிகழ்ச்சி இடம் பெறவுள்ளது


மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் பெளதீகவள அபிவிருத்தியை மேற்கொள்ளும் முகமாகவும் பழையமாணவர்களுக்கு இடையில் நட்புறவை ஏற்படுத்தும் முகமாக குறித்த இசை நிகழ்ச்சி இடம் பெறவுள்ளது


குறித்த இசை நிகழ்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் அதிபர், பழையமாணவர்கள் மற்றும் வடக்கு கல்வி வலயங்களை சேர்ந்த பாடசாலைகளின் புலம்பெயர் பழையமாணவர் சங்கபிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது


பிரித்தானியாவில் இடம் பெறவுள்ள மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி பழைய மாணவர்களின் இசை நிகழ்சி Reviewed by Author on April 07, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.