அண்மைய செய்திகள்

recent
-

"பெண் முதலில் பெண்ணாக இருக்க வேண்டும்" செழுங்கலை வித்தகர் முருங்கன் ஜெயாபாலாஜி


கலைஞனின் அகம் கணணியில் முகம் விம்பம் பகுதியில் மறை சமூக தமிழ் தன்னார்வப்பணியாளருமாகிய “முதுநிலைப்பெண் இலக்கியவாதி” முருங்கன் ஜெயாபாலாஜி என அழைக்கப்படும் செழுங்கலை வித்தகர் 
திருமதி சந்தான் மேரி அன்ரலின் ஜெறோஸ் அவர்களின் அகத்திலிருந்து….

தங்களைப்பற்றி- நான் புத்திரர்கண்டான் மாவிலங்கேணி முருங்கன் மன்னாரில் எனது கணவர் அமரர் சிமியோன் சந்தான்(பாலா) ஒய்வு பெற்ற கிராம அலுவலர் பிள்ளைகளுடன் கலைச்சமூகப்பணியில் ஈடுபட்டு வருகின்றேன்.

தங்களின் பெற்றோர்கள் பற்றி… எனது தந்தை திரு.சவரிமுத்து தாய் திருமதி.அற்புதம் இருவரும் நீண்ட நெடிய கல்விப்புலத்தினைச்சேந்தவர்கள் பாடசாலை அதிபர்களாக பணியாற்றி ஓய்வு பெற்று அமரர்களானவர்கள் இவருடைய மூன்று அக்காமாரும் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் அப்படியே அவர்களின் பிள்ளைகளும் ஆசிரியர்களாக…. எனது தம்பிகளான ஜெயராஜ் சமூகசெயற்பாட்டாளர் மற்ற தம்பி  கண்ணன் அவர்கள் சிறந்த விடுதலைசெயற்பாட்டாளராகவும் கணித ஆசிரியராகவும் சிறந்த கவிஞராகவும்  சம கண்ணன் சூரியன் பெயர்களில் ஏராளமான கவிதைகளை  எழுதினார் மக்களே எழுக என்ற பெயரில்  ஒரு கவிதை நூலையும் வெளியிட்டார்.
கவிதை எழுதும் எண்ணம் எவ்வாறு உருவானது
 பள்ளிக்காலங்களில் எழுதியிருக்கிறேன் அப்பப்போது எழுதத்தோன்றினால் எழுதுவேன் எனக்கு மிகவும் பிடித்துப்போனால் அவற்றினை பத்திரிகைகளுக்கு அனுப்புவேன் குறிப்பாக 1970 ஆண்டு காலப்பகுதியல் இருந்துதான் சிரித்திரன்,வித்தியாரம்மஞ்சரி பத்திரிகைகளுக்கு நான் தூண்டில்,மல்லிகை சஞ்சிகைகளுக்கும் எழதினேன் 1980ற்கும் 1984ம் பிறகு எனது கணவர் சிறையில் இருக்கும் போது தீவிரமாக எழுத ஆரம்பித்தேன் தனிமை கோபம் எல்லாவற்றினையம் எனது கவிதையின் மூலம் வெளிப்படுத்தினேன்.தொடர்ந்தது.  

கவிதை எழுத உங்களுக்கு காரணகர்த்தாவாக இருந்தவர்கள் பற்றி--- 

சிறுவயதிலே இயற்கையை அன்பு செய்கின்ற மனோபாவத்தினை என்னுள் ஏற்படுத்துவதில் பசமையான சூழலும் றோஸ்வாசா என்ற எமது இல்லத்தின் பங்கும் எனது பெற்றோரும் காரணமாய் இருந்தார்கள் அத்தோடு கடவுளுக்கு சமமாக கல்வியை மதித்த அன்றைய யாழ்ப்பாணம் வசிப்பு பழக்கத்தினையும் புத்தகங்களுடனான ஈடுபாட்டையும் எனக்கு கற்றுத்தந்தது.

நவாலியூர் நாயகி என இலக்கிய உலகில் அறியப்படுகின்ற என் உறவினரும் எழுத்தாளருமான ஆசிரியை மேரி நாயகி கவிதைக்கானவித்தை என்னுள்விதைத்த முதற்பெண்மணி ஆவார் மற்றும் திருமதி.திரேசா மக்ஸிமஸ் லெம்பேட் (றோசா டீச்சர்) முருங்கன் கிறிஸ்து அரசர் பாடசாலை திருமதி குமாரசாமி பண்டத்தரிப்பு மகளிர் உயர்நிலைப்பள்ளி
அருட்செல்வி டனியலா திருக்குடும்பம் கன்னியர் மடம் யாழ்ப்பாணம்ஆகியோரின் பாதம் பணிகின்றேன்.

நூலுருவாக்கம் என்ற எண்ணம் ஏன் வரவில்லை......
எண்ணம் இல்லாமலில்லை பொருளாதாரம குடும்ப சு10ழல் அப்போதை போர்க்கால சூழல் எல்லாம் எனது நூலுவாக்கும் எண்ணத்திற்கு பெரும் தடையாக இருந்தது நானும் அப்படியே விட்டுவிட்டேன் 40வருடங்கள் கடந்து விட்டது ஆனால் எழுதுவதையும் பத்திரிக்கைக்கம் அனுப்புவதை கைவிடவே இல்லை தொடர்ந்து வந்தேன்.

40வருடங்கள் கடந்து தற்போது நூலாக்கும் எண்ணத்தின் வெளிப்பாடு …. ஆம் அதுவும் நான் பெரிதாக எண்ணவில்லை ஒரு கலைஞர்சந்திப்பில் திரு.பத்திநாதன் அவர்களை கண்டு கதைத்திருந்தேன் 1000கவிதைகள் நூலில் எனதுகவிதையும் பத்திநாதன் ஜயாவின் கவிதையும் வந்திருந்தது அவரதுகவிதைக்கு விமர்சனம் எழுதியிருந்தேன் அந்த விமர்சனம் மன்னாவில் பிரசுரமானது. அதைப்பார்த்து விட்டு என்னுடன் தொலைபேசியில் பேசினார் விமர்சனம் கைதேர்ந்த ஒருவர் எழுதியதுபோல இருக்கின்றது என்று பாராட்டினார்அப்போதுதான் எனது 10 கவிதைகளை அனுப்பிவைத்தேன் அதைப்படித்துவிட்டு அருமையான கவிதைகள் உங்களிடம் உள்ள மீதி கவிதைகளையும் அனுப்புங்கள் என்றார் நானும் அனுப்பினேன் என்ன ஆச்சரியம் துண்டு துண்டாக அங்கும் இங்கும் இருந்த எனது 90கவிதைகளை தொகுத்து ஒரு நூல் வடிவாக எனது கையில் தந்தார் அப்போதே நான் நூல் வெளியிட்ட ஒரு மனநிறைவை மனமகிழ்ச்சியை பெற்றுக்கொண்டேன். அவரே முன்னின்று புத்தக பிரின்ரிங் வேலைகளைப்பார்த்தார் நானும் பிரதியினைப்பாரத்தன் நூலுருப்பெற்றது.

 40 வருட எழுத்தினை சமூகத்தில் பெண்படைப்பாளிகளாக நின்று தலைப்பிரவசம் எனும் தலைப்பில் கவிதையை வெளிக்கொணர்வது பற்றிய உணர்வு….  
நான் எதிர்பார்க்காத அளவிற்கு எனது உறவுக்காரரும் ஊர்மக்களும் தாமாக முன்வந்து என்ன செய்யவேண்டும் என்று கேட்டு கேட்டு செய்தாங்க நிறைவான ஆதரவும் அது போல எழுத்துத்துறை சார்ந்தவர்களின் உதவியும் பல உறவுகளின் ஆதரவும் அதிகமாகவே இருந்தது எனது இந்த நூல் தான் எமது ஊரின் முதல் நூல்வெளியீடு எனலாம்.எல்லோரும் என்னுடன் தனிப்பட்ட முறையில் நல்மனத்தடன் பழகுபவர்கள் எனக்குஎதாவது செய்யனும் என்று எதிர்பார்த்து செய்தது போலவே இருந்தது.முதல் 27-04-2019வெளியிடுவதாக இருந்தது 01-06-2019 அன்றுதான் வெளியீடு கண்டது நிறைவானவெளியீடாக இருந்தது.

பெண் படைப்பாளியாக சமூகத்திற்கு சொல்ல நினைப்பது…. சமூகத்திற்கும் குறிப்பாக பெண்களுக்கும் நான்சொல்ல விரும்புவது எழுத்துதுறை தவிர்ந்து வேறு எந்ததுறையானாலும்சரி பெண்கள் சாதிப்பதைவிட ஒரு பெண் என்பவள் தாயாக சகோதரியாக மனைவியாக தனது உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
முதல் என்று நினைக்கின்றேன்.

 பெண் முதலில் பெண்ணாக இருக்க வேண்டும். பெண் பெண்ணியத்திற்குரிய வாதத்திற்கு நான் வரவில்லை பெண்ணுக்குரிய பொறுப்புக்கள் என்னும் கருத்துப்படி நான் என்னுடைய கணவன் பிள்ளைகள் பார்க்கனும் எனக்குரிய பொறுப்புக்களை சரியானமுறையில் செய்யிறதுதான் முதல் பிறகுதான் மற்ற விடையங்கள் என்று நினைக்கின்றேன். வீடுதான் முதல் வெளியில போய் செயலாற்றவது பிழை என்று சொல்ல வரவில்லை வெளிய செய்யாம இருந்திற்று வீட்டிற்குள்ள செய்யலாம் வீட்டில பொறுப்புக்களை செய்யமா வெளியில் சமூகத்திற்கு சேவையாற்றுவது அழகல்ல வீட்டில் பொறுப்பினையும் சமூகத்தில்சேவையாற்றுதல் உண்மையில் சிறந்த திறமையதான்….

தற்போது வெளிவரும் இலக்கியப்படைப்புக்கள் இளையோரால் வெளியிடப்படுகின்றது அப்படைப்புக்களில் பொருள் செறிவு இல்லை எனும் கருத்துப்பற்றி…  

தற்போது எழுதுவோர் எடுத்துக்கொள்ளும் விடையத்தில் கருத்துபொருள் செறிவு குறைவாகத்தான் உள்ளது வெறுமனே வெளியீட்டு கணக்கிற்காக நூல்களை வெளியிடுகின்றார்கள் நூலின் தரம்தராதரம்பொருட்செறிவு கருத்தாளம் மிக்கதாக அமையும் என்றால் அது எமது இலக்கிய வளர்ச்சிக்குபெரும் சிறப்பாக அமையும் எனலாம்.
 
கவிதை பற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி…  
ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகின்றது 1985அருட்கலாநிதி வின்சன்ற்பற்றிக் அடிகளார் நான் சஞ்சிகை ஆசிரியராக கடமையாற்றிய காலத்தில் எழுத்தாளர்பட்டறை ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பற்றதுஅந்நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டோம் கவிதை நாடகம் சிறுகதை என ஒவ்வொன்றையும் அத்துறைசார்ந்தபேராசிரியர்கள் வழிநடத்தினார்கள். கவிதைபற்றி போராசிரியர் மௌனகுரு அவர்கள்உரை வழங்கினார்.எல்லோரும் ஒரு கவிதை எழுதி வைக்கும் படி இடவேளையின் போது பணித்துச்சென்றார் அந்தநேரத்தில் என்னால் எதுவும் எழுதமுடியவில்லை குறிப்பிட்ட நேரம் முடிவடைகின்ற வேளையில் நான் அவசரஅவசரமாய் இப்படிஎழுதினேன்.

எட்டரை மணிக்கும் பத்தரை மணிக்கும் 
இடையேஇருக்கும் இரண்டு மணிக்குள் 
“எழுதித்தா” என்றால் என்னய்யா நியாயம்? 
நேரம்குறித்து விரைந்து சென்று 
தெரிந்து பொறுக்கி எடுத்து வந்து 
கொடுத்துவிட கவிதை என்ன கத்தரிக்காயா? 

கவிதை என்ன கத்தரிக்காயா என்று தலைப்பிட்டு மேசையில் வைத்து விட்டேன் போராசிரியர் மௌனகுரு அவர்கள் ஒவ்வொரு கவிதையினையும் படித்தவர் மிகவும் உற்சாகமாக சொன்னார் இதுதான் கவிதை என்று நான் எழுதிய கவிதையை படித்துவிட்டு நீங்கள் எதை உணருகிறீர்களோ அதை அப்படியே வெளிப்படுத்துவதுதான் கவிதை என்றார் என்ன நியாயம் என்றில்லாமல் என்னய்யா நியாயம் என்று எழுதியது மிகவும் சிறப்பு என்றும் பாராட்டினார் வாழ்க்கை தான் கவிதை என்பதைஉணர்த்திய ஒரு சம்பவம் அது.
தனது அடுத்த படைப்பு பற்றி.....
கவிதை சிறுகதை ஆய்வு விமர்சனம் என்பனவற்றில் ஆர்வம் செலுத்தி வருகின்றேன் சிறுகதை இதுவரை குறைந்தது 06 சிறுகதைகள் தான் எழுதியுள்ளேன் அனால் கவிதைதான் ஏராளமாய் எழுதி வைத்திருக்கின்றேன் எழுதவும் இருக்கின்றேன். அடுத்த படைப்பாக வெளிவரும் என்றால் அதுவும் கவிதைப்படைப்புத்தான் அனால் இப்போதுவெளியிடும் நோக்கம் இல்லை…

தாங்களின் எழுத்திற்கு களம் அமைத்துகொடுத்தபத்திரிக்கைகள் பற்றி… 1980 ஆண்டு காலப்பகுதிகளில் சிரித்திரன் முதலில் எழுதினேன் அதனைத்தொடர்ந்து சுகந்திரன்- தமிழரசுக்கட்சிசார்ந்த பத்திரிக்கை நான் புதிய உலகம்,அன்பு மயம்,வீரகேசரி,பாதுகாவலன்,தினக்குரல்,மன்னா வித்தியாரம் போன்ற பலபத்திரிகைகள் எனக்கு பெரும் உதவியாக எனது படைப்புக்களை சுமந்து வந்தது. 1970களில் இலங்கை வானொலியோடு "பாட்டும்பதமும்" "இன்றையநேயர்" நிகழ்ச்சிகளிலும நாடகங்களுக்கு விமர்சனமும் எழுதினேன்.

 மூத்த கலைஞர்கள் இளம்கலைஞர்கள் மதிப்பதில்லை கலைஞர்களை கௌரவிப்பதும் இல்லை என்ற கருத்துப்பற்றி….  

தற்போதைய சூழலில் இளையோர் பெற்றோர்களை பெரியோர்களை ஆசிரியர்களை இவர்களையே மதிப்பது குறைவாக இருக்கும் போது எப்படி கலைஞர்களுக்கு மதிப்பு இருக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்க கூடாது.கலைஞர் கௌரவிப்பது எனும் போது அதுவும் ஒரே கலைஞரையே தினம் எல்லா நிகழ்வுகளிலும் கௌரவிப்பதுதான் தற்போதைய நிலைமையாக உள்ளது. அந்த கலைஞர் நிறைய சேவையாற்றியுள்ளார் அவரிடம் திறமையுள்ளது என்றாலும் அவருக்கே கௌரவிப்பது நல்லசெயலாக இருக்காது ஏனைய கலைஞர்களின் சந்தர்ப்பங்களும் தடைப்படுகின்றது அல்லவா அவர்களுக்கான நேரம் மறுக்கப்படுகின்றது புதிய இளம் கலைஞர்களின் உருவாக்கம் குறைகின்றது.

பெண்படைப்பாளியாக இளையோருக்குதங்களின் கருத்து.
 எழுத்துத்துறையோ ஏனைய துறையாகவோ இருந்தாலும் அந்நதந்ததறையில் எமது திறமையை வெளிப்படுத்தி சாதிக்க வேண்டும் அதிலும் குறிப்பாக எழுத்துத்துறையில் இருப்பவர்கள் எழுதுவதுபோலவேசெயலிலும் இருக்கவேண்டும் அதுதான் மிகவும் சிறப்பானதொரு விடையமாகும்.

தங்களின் கலைப்பயணத்தில் மறக்கமுடியாதவர்கள் பற்றி… 

 எனது வாழ்விலும் கலைப்பயணத்திலும் உறுதுணையாக இருந்தவர் எனது கணவர் சிமியோன் சந்தான் ஒய்வு பெற்ற கிராமஅலுவலர் அத்தடன் கலைப்பயணத்தில் ஆரம்பத்தில் எனது கவிதைகளை பார்த்துவாசித்துபாராட்டி பத்திரிகைக்குஅனுப்பசொல்லி 1980ஆண்டிலே தானேவேண்டி அனுப்பியும் எமது பங்கில் பத்திரிகையிலும் வரும் போட்டிகளுக்கு என்னையும் எழுதச்சொல்லி ஊக்கப்படுத்திய அருட்தந்தை தேவராஜ் அடிகளார் அவர்களையும் மன்னா பத்திரிகையின் ஆசிரியராக இருந்த காலத்தில் எனது சுமார் 55கவிதைக்கு மேலாக வெளிப்படுத்தி ஆக்கமும் ஊக்கமும் தந்த அருட்தந்தை தமிழ்நேசன் அடிகளார் அவர்களையும் எனது கவிதைகளை படித்து பாராட்டி ஊக்கமும் தந்த அருட்தந்தை அன்புராசா அடிகளார் மற்றும் அருட்சகோதரி பிரசில்டா தலைப்பிரசவம் நூல் வெளிவரக்காரணமாய் இருந்தவர்களில் மிகவும் பிரதானமானவர் திரு.பத்திநாதன் ஐயா அவர்களையும் மற்றும் திரு.டேவிற் மாஸ்ரர் அவர்களையும் இன்னுமாக பெயர் குறிப்பிட்டு சொல்ல பலர் உள்ளார்கள் அவர்கள்அத்தனைபேரையும் நினைவில் நிறுத்தி எல்லாம் வல்ல இறைவனையும் வேண்டுகின்றேன்.

தங்களின் கவிதை பற்றிய குறிப்பு  

நல்ல கேள்வி தான் எனது கவிதை ஒன்று போராட்டம் முடிந்த பின்பு எழுதியது "காத்திகை மாதம்-இது
கார்த்திருப்பின் மாதம்
கண்ணீரின் மாதம்
கல்லறையின் மாதம்"
தரம் 05 தான் படித்திருக்கும் குமர்பிள்ளை எனது அப்பாவின் சொந்த ஊர் கொக்குப்படையான் அங்கதான் நான் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டபோது ஒரு ஆசிரியர் உங்களதுகவிதை நல்லாக இருக்கு பாராட்டி விட்டு அது என்ன காத்திகை மாதம்-இது கார்த்திருப்பின் மாதம் கார்த்திருப்பின் மாதம புரியல்ல எனக்கு அப்போததான் அந்த குமர்பிள்ளைஅந்த வரி மாவீரர் உரையைஞாபகபடுத்தும்வரி என்கிறாள்அந்தப்பிள்ளை அப்போது எனக்கு பெருமையாக இருந்தது. எனது கவிதைகள் எந்தளவிற்கு இளம் பிள்ளைகளின் மனதில் பதிகின்றது. என்று எமம்மைப்போன்றவர்களுக்கு இதுதான் பெரும் மகிழ்ச்சி  

தங்களின் வாழ்க்கையில் மறக்கமுடியாத விடையம் பற்றி… 
நிறைய இருந்தாலும் எனதுவாழ்க்கையே புரட்டிப்போட்ட மறக்க முடியாத சம்வம் என்றால் எனது அன்புக்கணவர் என்னை விட்டு இறைவனடி சேர்ந்ததுதான் இன்னும் நான் மீளமுடியவில்லை எனக்கு எல்லாமாக இருந்தவர் இன்று என்னுடன் இல்லை…..இறைவனை…தினம்…


தங்களின் சேவைகளுக்கு பாராட்டி கௌரவித்த விருதுகள் பற்றி--- 

 இலக்கியவாதிகளை வாழும்போதே வாழ்த்துகின்ற கௌரவிக்கின்றதுசிறப்பானவிடையம் தான் எனது கணவர் ஏதும்விழாக்களுக்கு சென்றுவந்தால் அங்கு எழுத்துலகம்சார்ந்துவிருதுகள் பெற்றால் என்னிடம் சொல்லி கவலைப்படுவார் ஏன் உமக்கு தரவில்லை என்று கேட்பார் நான் சொல்வேன் அதற்கு இன்னும் நாள் என்றுசமாளிப்பேன் அவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார் சொல்லிக்கொண்டே இருப்பார் நான் பெரிதுபடுத்தாமல் இருந்தேன் 40ஆண்டுகள் கழித்து எனது தலைப்பிரசவம் கவிதை நூல்வெளியிட்ட பின்புதான் என்னைப்பற்றியதொரு அறிமுகம் அடையாளம் கிடைத்தது போல பாராட்டுக்களைப்பெற்றேன்.

  • 21-11-2019 அன்று செழுங்கலை வித்தகர் எனும் விருதினை நானாட்டான் பிரதேச செயலகத்தினால் கலாசாரவிழாவில் வைத்து வழங்கப்பட்டது.
 தாங்கள் பணியாற்றும் அமைப்புக்கள் பற்றி---  

  • நிர்வாக சபை உறுப்பினர்-தமிழ்சங்கம் மன்னார் 
  • நிர்வாக சபை உறுப்பினர்-கலாசாரப்பேரவை பிரதேசசெயலகம் நானாட்டான். லிகிதர்-ப.நோ.கூ சங்கம் நானாட்டான் 1973-1983 
  • தலைவி- பெண்கள வட்டம் முருங்கன் 1984-1986 சேவை தொடர்கின்றது. 
 மன்னார் மண்ணின் பெருமையை 10 வருடங்கள் கடந்தும் வெளிப்படுதி வரும் நியூமன்னார் இணையம் பற்றி…  
நியூமன்னார் இணையம் மன்னாரில் நல்ல செயற்பாடுகளை செய்து வருகின்றது நான் எனது இத்தனை வருட கலைச்சேவையினை செய்துள்ளேன் ஆனாலும் என்னை வீட்டுக்கு வந்து எனது ஆவணங்களை பார்வையிட்டு யாரும் செவ்வி கண்டதில்லை முதல் தடவையாக நியூமன்னார் இணையத்தில் இருந்து வை.கஜேந்திரனாகிய நீங்கள் செவ்வி கண்டுள்ளீர்கள் இது உண்மையில் அரிய கலைப்பணிதான்

 கலைஞர்கள் இறந்தாலும் இவ்வாறான செவ்வி மூலம் மீண்டும் நினைக்கப்படுவார்கள் அவர்களின் சேவைக்கு பெரும் சான்றாக அமையும். எனது குடும்பமும் நானும் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம் இது ஒரு வரலாற்றுப்பதிவாகும் எத்தனையோ கலைஞர்கள் இன்னும் மறைவாகவே இருக்கின்றார்கள் அவர்களையும் வெளிக்கொணர வேண்டும் என்னை வெளிப்படுத்திய நியூமன்னார் இணையக்குழுமத்திற்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் என்றும்.....

நியூமன்னார் இணையக்குழுமத்திற்காக சந்திப்பு--கவிஞர் வை.கஜேந்திரன்-BA 
 

"பெண் முதலில் பெண்ணாக இருக்க வேண்டும்" செழுங்கலை வித்தகர் முருங்கன் ஜெயாபாலாஜி Reviewed by Author on January 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.