சங்குப்பிட்டி பெண் கொலை வழக்கு – சந்தேகநபர தவில் வித்துவான் அல்ல, மறுப்பு அறிக்கை வெளியீடு
பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல என இலங்கை இசை வேளாளர் இளைஞர் பேரவை தெரிவித்துள்ளது.
குப்பிளான் பகுதியை சேர்ந்த தவில் வித்துவானை கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் என ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் இலங்கை இசை வேளாளர் இளைஞர் பேரவை வெளியிட்ட அறிக்கையில் அதனை மறுத்துள்ளது.
அந்த அறிக்கையில், பூநகரி பகுதியில் இடம்பெற்ற கொலைச்சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படும் நபர் தவில் வித்துவான் என்று கூறப்பட்டு ஊடகங்கள்,சமூக வலைதளங்கள் போன்றவற்றில் பரப்புரை செய்யப்படுகிறது.
குறித்த நபர் ஏற்கனவே பல திருட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல் களுடன் தொடர்புபட்டு பல வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்தவர். முதலில் அவர் ஒரு தவில் வித்துவான் அல்ல என்பதை அறியத்தருகின்றோம்.
எனவே அவர் தொடர்பான செய்திகளை வெளியிடுகையில் தவில் வித்துவான் என்பதை குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என தாழ்மையாக வேண்டுகோள் விடுக்கின்றோம் – என்றுள்ளது.
Reviewed by Vijithan
on
November 06, 2025
Rating:
.jpg)

No comments:
Post a Comment